எரிபொருள் விலை உயர்வு : பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்,



 தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை இன்று தெரிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டண திருத்தங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள சூத்திரத்திற்கு அமையவே, கட்டணங்கள் திருத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருந்தால் மாத்திரமே பேருந்துக் கட்டணத்தை திருத்த முடியும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு அந்த எல்லைக்குள் இல்லை என்பதால், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பேருந்துகள் சேவையில் இருந்து விலகுவதாக கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறுக்கூறி ஒரு சில பேருந்துகள் சேவையில் இருந்து விலகினாலும், ஏனைய பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top