Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தங்கத்தின் விலையில் மாற்றமா? வெளியான விலை நிலவரம்

 நேற்று (08) பதிவான தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (09) இதுவரை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.




அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணிகள் தங்க விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக காணப்படுகின்ற நிலையில், இன்று தங்க விலை நேற்றைய மட்டத்திலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக