கொழும்பில் பெண் ஒருவர் செய்த திருவிளையாடல்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Valluvan Media
0



கொழும்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்ணால் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.


கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் விற்பனையாளரான பெண் தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனை மூலம் பெருந்தொகை சொத்தினை பெற்றுள்ளார்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள, தொட்டலங்க பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 300 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு காணிகள் மற்றும் மூன்று மாடி வீடு என்பன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள முடக்கல் உத்தரவை நீடித்து அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, நேற்று முதல் 7 நாட்களுக்கு இந்த முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top