இலங்கையில் இவ்வளவு வெளிநாட்டு பணமா? மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை!

Valluvan Media
0



இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு (Official Reserve Assets) கடந்த மே மாத இறுதியில் 1.6 சதவீதத்தால் அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தொகையானது சீன நாணயப் பரிமாற்றல் (Currency Swap) வசதியையும் உள்ளடக்கியதாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் இக்கையிருப்பு 6.766 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, நேற்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 342 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

டொலருக்கான தேவை மற்றும் பொருட்கள் இறக்குமதித் தேவை அதிகரித்தமையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்குக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும், டொலரின் மதிப்பு அதிகரித்துள்ள போதிலும், வாகன இறக்குமதி வீழ்ச்சியடையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்க அத்தியட்சகருமான சந்தன புஞ்சிஹேவா கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது குறித்து அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ ஆகியோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top