நள்ளிரவில் யாகபூஜை - பாடசாலை மாணவிக்கு நடந்தது என்ன?

Valluvan Media
0

 மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் யாகபூஜையின் பேரில் மாணவியொருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர், ஹெம்மாத்தகம - மாவனெல்லை வீதியில் உள்ள தெவனகல பகுதியில் 'சிங்கள ஆயுர்வேத மருத்துவ நிலையம்' ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடலிலுள்ள 'தோஷங்களை நீக்குவதற்காக' யாக பூஜை செய்வதற்காக அவரை ஏமாற்றி வரவைத்து, பாலியல் அத்துமீறல் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மாவனெல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த பாடசாலை மாணவி, தனக்கு நேர்ந்த தவறான அத்துமீறல் குறித்து மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவரே சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவி மாவனெல்லை பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவியாவார்.

சந்தேகநபரை கைது செய்துள்ள மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top