நாளை முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்? வெளியான அறிவிப்பு!

Valluvan Media
0

 வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, எதிர்வரும் நாளை (01.07.2026) முதல் பேருந்து கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



​கலந்துரையாடல் இன்மை குறித்த சர்ச்சை:

​இது குறித்துக் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, "இந்த வருடத்திற்கான பேருந்து கட்டணத் திருத்தத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். எவ்வாறாயினும், இது தொடர்பாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை பேருந்து சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை" எனச் குற்றம் சாட்டியுள்ளார்.

​நீதிமன்ற எச்சரிக்கை:

​இம்முறை எதிர்பார்க்கப்படும் கட்டணத் திருத்தம் சரியான முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால், உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

​அமைச்சரவை முடிவிற்காகக் காத்திருப்பு:

​இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வினவியபோது, பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டண திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

​சமீபகாலமாக எரிபொருள் விலைக் குறைப்பு மற்றும் மாணவர்களின் இடைவிலகல் தொடர்பான தகவல்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தப் பேருந்து கட்டண விவகாரமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top