பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 இலங்கையில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு கல்வி அமைச்சே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



​முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள விசேட கருத்து வெளியீட்டின் போதே, நாட்டின் கல்வி முறையில் நிலவும் இந்த மோசமான பின்னடைவு குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​பெற்றோர்களை வாட்டும் பாடசாலைச் செலவுகள்!

​பல்வேறு தேவைகள் மற்றும் செயற்பாடுகள் என்ற பெயரில் தற்காலத்தில் பாடசாலைகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் ஏழைப் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல பெற்றோரால் பாடசாலைகள் கோரும் இந்த நாளாந்த செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்றும், இதுவே மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது குறைவதற்குக் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​அதேநேரம், தற்காலத்தில் பெருகிவரும் தனியார் மேலதிக வகுப்புக்களின் (Tuition) விரைவான பரவலும், அவற்றின் கட்டண உயர்வும் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மேலும் பொருளாதாரச் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

​"அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்"

​"அரசாங்கம் இந்த மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. மாணவர்கள் ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்பதை அடிமட்டத்திலிருந்து கண்டறிந்து, அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண பாடசாலை நிர்வாகங்களும் கல்வி அமைச்சும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செயற்பட வேண்டும்," என அவர் கூறினார்.

​கல்வி நிர்வாகத்தில் அதிகாரிகளால் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளும், திட்டமிடல் இல்லாத தோல்விகளுமே நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறை வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top