இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு கட்டணம்? சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Valluvan Media
0

 குடி நீர்க்கட்டணம் மிக சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என்று



 வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அமைச்சர் அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

குடிநீருக்கான கட்டண உயர்வானது மின்சாரக் கட்டண உயர்வைப் பொறுத்தே அமையும். ''மின்சாரக் கட்டணத்தை எடுத்துக்கொண்டால். அதில் 12% குடிநீர்க்கட்டணமும் அடங்கும். அந்த 12%-இல் 18% உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்.

குடிநீர்க்கட்டணம் உயருமா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்... 12%-இல் 18%... அந்தக் கட்டணம் தான் குடிநீரின் யூனிட்டுக்கு மாறப்போகிறது.
அதாவது, அது மிகச் சிறிய அளவாகும்.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் குடிநீர்க்கட்டணத்தையும் பாதிக்கிறது.'' என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top