வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் நாட்டில் வாகன இறக்குமதிச்செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் உள்ளடங்கியுள்ளது.இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் மொத்த வாகன இறக்குமதிச் செலவு 821.3 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த வாகன இறக்குமதிச் செலவு 194 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருந்துள்ளது.
இந்த ஆண்டு (2026) 821.3 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வாகன இறக்குமதிச் செலவில், 621.1 மில்லியன் அமெரிக்க டொலர் தனியார் வாகன இறக்குமதிச் செலவும், மீதமுள்ள 200.2 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக வாகன இறக்குமதிச் செலவாகவும் பதிவாகியுள்ளது.

இதில், தனியார் வாகன இறக்குமதிச் செலவிற்காக 141.8 மில்லியன் அமெரிக்க டொலரும், வர்த்தக வாகன இறக்குமதிக்காக மீதமுள்ள 52.2 மில்லியன் அமெரிக்க டொலரும் செலவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top