அரச ஊழியர்களுக்கு இனி எரிபொருள் கொடுப்பனவு இல்லையா? வெளியான அறிவிப்பு!

Valluvan Media
0



அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்கொள்ளும் அரச அதிகாரிகள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையிலேயே நிதி அமைச்சினால் எரிபொருள் கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, கடமைகளுக்காகத் தங்களது சொந்த வாகனங்கள் அல்லது உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மாதாந்தம் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தமது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வீடுகளில் இருந்தோ அல்லது பணியிடங்களில் இருந்தோ பல்வேறு பிரதேசங்களுக்குப் பயணிக்கும் போது, தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை விடவும் கணிசமான அளவு கூடுதல் தொகையை அரச அதிகாரிகள் சொந்தமாகச் செலவிட வேண்டியுள்ளது.

தற்போதைய இந்த நடைமுறையானது, எரிபொருள் கொடுப்பனவுகளுக்கு உத்தியோகபூர்வமாக தகுதி பெற்றுள்ள பெருமளவிலான அரச ஊழியர்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், நிதி அமைச்சு இந்த விவகாரம் குறித்து உடனடி அவதானம் செலுத்த வேண்டும் என மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

"எரிபொருள் விலை அதிகரிப்பினால் அரச அதிகாரிகள் பெரும் பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தற்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, எரிபொருள் கொடுப்பனவுகளை உடனடியாகத் திருத்தியமைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top