குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்காக அரசாங்கத்தின் புதிய திட்டம்!

Valluvan Media
0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்த ஆண்டில் 100 'சமுர்த்தி ஆரோக்கியமான உணவு ' மையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.



சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் குறித்து அமைச்சர் உபாலி பன்னில ,

இந்தத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழுள்ள 51ஆவது 'சமுர்த்தி ஆரோக்கியமான உணவு' மையம் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட 100 நிலையங்கள் என்ற இலக்கை அடைவதற்காக ஏனைய மையங்களை அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top