2026- FIFA உலகக் கோப்பை இத்தனை கோடியா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

Valluvan Media
0

 2026-ம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரை இம்முறை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடாத்த உள்ளன.




எனினும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் அசல் உலகக் கோப்பையானது பலதரப்பட்ட தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் இந்த செம்பியன் கோப்பையானது, தூய தங்கத்தால் செய்யப்பட்ட இதன் அடிப்பகுதியில், பச்சை நிறத்திலான 'மாலக்கைட்' (Malachite) கற்கள் வளையங்களாகப் பதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இதன் அளவானது, சுமார் 36.8 சென்றிமீட்டர் உயரமும், 6.2 கிலோகிராம் எடையும் கொண்டது.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் பவுன்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.191 கோடியாகும்.

மேலும் கோப்பையின் பாதுகாப்பு காரணங்களுக்காக வெற்றியாளர்கள் இந்த அசல் கோப்பையைத் தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் . அதற்குப் பதிலாக வெண்கலத்தால் ஆன அதன் பிரதி (Replica) ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் அசல் கோப்பை சுவிட்சர்லாந்தில் உள்ள பிஃபா அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

2026 உலகக் கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூபா 6,943 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல் செம்பியனுக்கு இந்திய ரூபாயின் படி ரூபா 478 கோடியம் 
 2 ஆவது பரிசாக ரூபா 315.1 கோடியும்,  3ஆவது பரிசாக ரூபா 276.9 கோடியும்,4ஆவது பரிசாக .257.8 கோடி ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த பிரம்மாண்ட தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசாக குறைந்தபட்சம் 100 கோடி ரூபா வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரை வட அமெரிக்காவின் மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதால், ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கும் வகையில் 3 அதிகாரப்பூர்வ சின்னங்கள் (Mascots) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

மேப்பிள் (Maple): கனடாவைக் குறிக்கும் 'மூஸ்' மான் உருவம்.

ஸாயு (Zayu): மெக்சிகோவைக் குறிக்கும் 'ஜாகுவார்' சிறுத்தை உருவம்.

கிளட்ச் (Clutch): அமெரிக்காவைக் குறிக்கும் 'வழுக்கைத் தலைக் கழுகு' உருவம் என்ற வகையில் அமைக்கப்பட்டது விசேட அம்சமாகும் .

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top