Top News

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! அவதானமாக இருங்கள்.

 நலன்புரி நன்மைகள் சபை ஊடாக ரூ.5,000 இற்கும் சற்று குறைவான தொகை மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக 'Free Lawyers' அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.




இது தொடர்பான மேலதிக நிதிச் செலுத்துகை குறித்து நாடாளுமன்றம் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், 'Checks and Balances' (தடுப்பு மற்றும் சமநிலை) முறைமையின்றி அரச நிதியைப் பயன்படுத்துவது குற்றச் செயல், ஊழல் மற்றும் மோசடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 148ஆவது உறுப்புரையின் கீழ் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் பின்வரும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில்களைத் தேட வேண்டும் எனவும் 'Free Lawyers' அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நிதி பெறவிருந்த 18 இலட்சத்திற்கு அண்மித்த குடும்பங்களில் எத்தனை பேருக்கு உரிய தொகையை விட அதிகத் தொகை அல்லது இரட்டைச் செலுத்துகைகள் கிடைத்துள்ளன?

கேகாலை, மொனராகலை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைச் செலுத்துகைகள் குறித்து இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

இருமுறை நிதி வழங்கப்பட்ட (Double Payment) மற்றும் உரிய தொகையை விட மேலதிகமாக நிதி வழங்கப்பட்ட மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அஸ்வெசும பயனாளிகளுக்கு எவ்வித ஆராய்வுமின்றி, பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு?

நலன்புரிச் சபையின் நிதி அதிகாரங்களை வழங்கும் நடைமுறைக்கு அப்பாற்பட்டு இந்த நிதியைச் செலுத்திய அதிகாரிகள் யார்?

நலன்புரிச் சபையின் பணிகளுக்காக அரசியல் நியமனத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அதிகாரி/அதிகாரிகள்/ஆணையாளர் யார்?

அரசியல் நியமனங்களைப் பெற்று இவ்வளவு பெரிய தொகையை வீணடித்தமை/முறைகேடாகப் பயன்படுத்தியமை/ஊழல் செய்தமை குறித்த சம்பவம் தொடர்பில் தகுதியான அதிகாரத்தின் கீழ் ஆரம்ப கட்ட விசாரணை ஏதேனும் நடத்தப்பட்டுள்ளதா?

இந்தச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு Financial Regulations இன் கீழ் நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அதிகாரத்தை வழங்கிய அதிகாரி/அதிகாரம் யார்?

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக ரூ. 5,000 இற்கும் சற்று குறைவான தொகை மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என Free Lawyers அமைப்பு வலியுறுத்துகிறது.

அரசியலமைப்பின் 148ஆவது உறுப்புரையின் கீழ் உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 முக்கிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post