தமிழக முதலமைச்சர் விஜயின் அடுத்த மாஸ்டர் பிளான்! சூடுபிடிக்கும் அரசியல் களம்

Valluvan Media
0

 தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது. 




முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லி பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனி விமானம் மூலம் நாளை டெல்லி செல்ல உள்ள முதலமைச்சர் விஜய், தமிழக வளர்ச்சி திட்டங்கள், மத்திய நிதி ஒதுக்கீடு, மாநில உரிமைகள் மற்றும் பல்வேறு நிர்வாக தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10-ஆம் திகதி தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்றனர். பின்னர் அமைச்சரவை இரண்டு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு, மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் நிர்வாக பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

அமைச்சரவை அமைப்பு தற்போது முழுமை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்புகள் மூலம் மத்திய-மாநில உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top