Top News

நள்ளிரவோடு அதிரடியாக அதிகரிக்கிறது எரிபொருள் விலை! இவ்வளவு அதிகரிப்பா?

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.



புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூ. 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ. 265.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post