அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

Valluvan Media
0

 இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (09) ஒரு பவுணுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.




கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியானது நகை வாங்குவோருக்கு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top