Top News

வெசாக் பௌர்ணமி தினம் : அரசு ஊழியர்களின் விடுமுறையில் மாற்றம்!

 இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.




 வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் சமூக மட்டத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 30ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாக கருத வேண்டும் என்றும், மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை
தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தது.

முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்து.  

இந்த வர்த்தமானி அறிவிப்பு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தனா அபேரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post