Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (26) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 391,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது அது திடீரென 2,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக