பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

Valluvan Media
0

 பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 




அதன்படி பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு எதிர்வரும் 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து இந்த காப்புறுதித் திட்டமானது முன்னெடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயத்தை பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இன்று (21.05.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top