Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

அடுத்த 36 மணித்தியாலத்திற்குள் நடக்கப்போவது என்ன? - புரட்டிப்போடும் வானிலை!

 இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் நீடிக்கிறது. இது அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறி படிப்படியாக பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழைக்கால நிலைமை எதிர்வரும் 2 நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக