அரச ஊழியர்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அதி விசேட அறிவித்தல்

Valluvan Media
0
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறித்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.




இந்த வழிகாட்டுதல்களில், வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ முக்கிய நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட முறைகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிகளில் போது முக்கியமான அரசாங்கத்தரவுகளை ஊழியர்கள் செய்திப்பரிமாற்ற செயலிகள் மூலம் அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்களது கடமைகள் தொடர்பான தகவல்களின் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதுகாக்க, துறைத் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுக்க கடமைப்பட்டுள்ளார் என்றும் வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளது.

பெரிய அளவிலான மற்றும் மிகவும் முக்கியமான விடயங்களுக்கான அரசாங்க கூட்டங்களுக்கு http://meet.gov.lk என்ற டிஜிட்டல் தளம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டங்களைப் பாதுகாப்பாக நடத்த இந்த டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்த டிஜிட்டல் தளத்தை அணுகுவதற்காகத் தங்கள் நிறுவனம் அல்லது பிரிவிற்கான உள்நுழைவைப் பெற, GovTech Sri Lanka தகவல் மையத்தை 0112 497900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொலைதூரப் பணிக்காக மின்னணு ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top