வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்! வெளியான அவசர எச்சரிக்கை

Valluvan Media
0

 நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில்,

மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில், காலையில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மின்னல் விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top