எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்! உயர்கிறது எரிபொருள் விலை?

Valluvan Media
0

 அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றமான சூழல் மற்றும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலையற்ற தன்மையுடன் காணப்படுகின்றது.




இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலரைத் தாண்டியது.

ஈரான் மீதான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலை மீண்டும் குறைந்து தற்போது ஒரு பீப்பாய் 98.97 டொலராக வர்த்தகமாகின்றது.

இன்று வங்கிகளுக்கு வரவிருக்கும் பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்


விலை சற்று குறைந்திருந்தாலும், இன்றைய வர்த்தக ஆரம்பத்திலிருந்த விலையை விட இது அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக, கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு முன்னதாக இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது மசகு எண்ணெய் விலை 35 சதவீதம் உயர்வில் உள்ளது.

சர்வதேச அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மசகு எண்ணெய் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், எரிபொருள் விலையேற்றம் குறித்த கவலை உலக நாடுகளிடையே நீடிக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top