வங்கியில் பாரிய மோசடி செய்த ஊழியர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Valluvan Media
0

 வங்கி ஊழியர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரால் சமீபத்தில் பதிவான உள்மோசடி சம்பவத்தால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட இழப்பு சுமார் ரூ. 13.2 பில்லியன் தொகை என்று தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank) தெரிவித்துள்ளது.




அதே நேரத்தில், வாடிக்கையாளர் வைப்புத்தொகைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், வங்கிச் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதையும் வங்கி உறுதி செய்துள்ளது.
இது குறித்து தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank)ஏப்ரல் 6 இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

அந்த அறிக்கையில்,இந்த மோசடி ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பகுதிக்குள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், இதில் சில ஊழியர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை மிக அவதானத்துடன் கையாள்வதாகவும், நிதியை மீட்க சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் கணினி அமைப்பு அணுகல் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top