இலங்கை நடிகை எடுத்த திடீர் முடிவு! சோகத்தில் சினிமா உலகம்

Valluvan Media
0

 இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.



நடிகை உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடிகை சுபாஷினி உயிர்மாய்ப்பு செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ கோலில் பேசிய பிறகு அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்றும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி ஷூட்டிங்கிற்காக வந்த இடத்தில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சுபாஷினி ‘கயல்’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். 

திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த சுபாஷினி உயிர்மாய்ப்பு செய்து கொண்ட சம்பவம் அவரது இரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top