நாளுக்குநாள் எகிறிச்செல்லும் எண்ணெய் விலை! இலங்கையிலும் விலை மாற்றமா?

Valluvan Media
0

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (09) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.




உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி,

WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 97.85 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.61 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மசகு எண்ணெய்யைத் தொடர்ந்து இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று ஏற்றம் காணப்படுகிறது.

அதன்படி, அதன் விலை 2.732 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு, எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளின் உள்நாட்டு விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top