வேலைத்தளத்தில் முரண்பாடு கைகலப்பாக மாறிய சம்பவம் - கிளிநொச்சியில் பரபரப்பு!

Valluvan Media
0
கிளிநொச்சி நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




கிளிநொச்சி பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள மாவட்ட செயலக விடுதியின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த இருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த இருவரும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top