பாடசாலைகளில் அதிரடி மாற்றம்! அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் நினைவுக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது செலவுகளைக் குறைக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 
முந்தைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், சில பாடசாலைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து அதிகமாகச் செலவு செய்து, பெற்றோர்களுக்குத் தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்துவதாக அந்தச் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.
எதிர்கால நிகழ்வுகள் குறைந்தபட்ச செலவில், எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும்.

பெற்றோர்கள் கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், பாடசாலை நிதி மேலாண்மை குறித்த சுற்றறிக்கை 54/2023 மற்றும் பிற தொடர்புடைய நிதி விதிமுறைகளை பாடசாலை நிர்வாகங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top