ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.




நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரையும், 10,000 ரூபாய் கொடுப்பனவு 15,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.இதற்கமைய, இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம்.

குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top