மின் கட்டணத்தில் கிடைக்கப் போகும் பாரிய சலுகை - மக்களுக்கு அதிரடி அறிவிப்பு!

Valluvan Media
0

 90 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.




நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.04.2026) உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது இந்தச் சலுகை வழங்கப்படும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கான செலவை அரசாங்கமே ஏற்கும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top