வெப்பக் காடாக மாறும் இலங்கை! திணைக்களம் வெளியிட்ட அவசர அறிவிப்பு

Valluvan Media
0

 இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, இன்று (ஏப்ரல் 21) மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்டவற்றுடன் மொனராகலை மாவட்டத்திலுள்ள உள்ள சில இடங்களில் வெப்பம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச் சுட்டெண் 'அவதானம்' மட்டத்தில் இருக்கும் போது நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் மூலம் உடல் சோர்வு ஏற்படலாம், தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நடைமுறையில் புதிய மாற்றம்! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாகம் ஏற்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்த்து, நிழலான இடங்களில் தங்கவும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தவும், மென்மையான, வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top