Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

 


அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 


இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக 3 பில்லியன் 87 மில்லியன் 30 ஆயிரம் ரூபா செலுத்தப்படவுள்ளது. 

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 முதியோருக்காக 362 மில்லியன் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா செலுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக