ரிக் டொக் பார்த்த சிறுவனுக்கு தந்தை செய்த கொடூரம்! பொலிஸாருக்கு காத்திருந்த சோகம்!

Valluvan Media
0

 தெனியாய பகுதியில் பாடசாலைப் பாடங்களைப் படிக்காமல், கையடக்க தொலைபேசியில் டிக் டொக் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை, அவரது தந்தையே சூடான இரும்புக்கம்பியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.




இந்த கொடூர செயலைச் செய்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் வேலைக்குச் சென்ற தந்தை தனது கையடக்க தொலைபேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதனைப் பயன்படுத்திய சிறுவன் நீண்டநேரம் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட தந்தை, கடும் கோபத்தில் இரும்புக்கம்பியால் சிறுவனை சுட்டுள்ளார்.மறுநாள் காயங்களுடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், ஆசிரியர்களிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.

அதிபர் உடனடியாகச் சிறுவனை மீட்டுத் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன அமரத்ன தலைமையிலான குழுவினர், அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் தாய் நீண்டகாலமாகப் படுக்கையிலிருந்த நிலையில், அந்த வீட்டில் ஒருவேளை உண்பதற்கு உணவுகூட இல்லாமல் இருந்துள்ளது.பிள்ளைகளின் மற்றும் நோயுற்ற தாயின் அவல நிலையைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள், தங்களுக்குள் பணத்தைச் சேகரித்து அந்த குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் சில நாட்கள் தலைமறைவாக இருந்த தந்தையைத் தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், தெனியாய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top