இந்தியாவின் டெல்லியில் உணவு மற்றும் கூடார சேவை (Catering & Tent Service) தொழில் செய்து வரும் லோகேஷ் குப்தா (32) என்பவர், அஜய் போல் என்பவரது மகளின் திருமணத்திற்காகச் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதற்கான அவர் ரூ.2.5 இலட்சம் கோரியிருந்தார்.
முன்னதாக 50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மிகுதி தொகை அவருக்கு வழங்கப்பட வேண்டியிருந்தது.
இந்த நிலையில் நிலையில், அந்தத் தொகையைக் கேட்பதற்காக நேற்று இரவு அஜய் போல் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஜய் போல் மற்றும் அங்கிருந்த இரு சிறுவர்கள், லோகேஷை வலுக்கட்டாயமாக மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த மின்சார அரைக்கும் கருவியை இயக்கி , அதற்குள் லோகேஷின் இரண்டு கைகளையும் வலுக்கட்டாயமாக நுழைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.
இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட லோகேஷ் தற்போது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அஜய் போலை கைது செய்துள்ள காவல்துறையினர், அவருடன் இருந்த சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment