எரிவாயு விலையில் மாற்றம்! சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!

Valluvan Media
0

 மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று (26) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகியுள்ளன.




சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, உலக நாடுகளால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 105.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 94.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரே நாளில் இரு வேறு ரக மசகு எண்ணெய்களின் விலையில் இவ்வாறான முரண்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் விலை 2.523 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்து உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

இந்த விலை மாற்றங்கள் வரும் நாட்களில் சர்வதேச போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top