சற்றுமுன்னர் பிரதமர் ஹரிணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.




எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அரசைக் கவிழ்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணையையும் முறியடிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
"இந்த அரசுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்குவோம்" என்றும் அவர் சூளுரைத்தார்.

மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த அரசு, திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களால் வீழ்ந்துவிடாது என்று சுட்டிக்காட்டிய அவர், அரசியல் இலாபத்துக்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், அரசு முன்னெடுத்துள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எவ்விதத் தொய்வுமின்றித் தொடரும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top