Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

செவ்வாய் கிரகத்திற்கு தாவும் ட்ரம்ப்..! அடுத்து நடக்கப் போவது என்ன?

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெற்றிகரமான ஆர்டெமிஸ் II திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.




தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், முழுப் பயணமும் சிறப்பாக இருந்ததாகவும், தரையிறக்கம் கச்சிதமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தில் பங்கேற்ற விண்வெளி வீரர்களை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் வெள்ளை மாளிகையில் அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக ஜனாதிபதி, "இதை நாம் மீண்டும் செய்வோம், அதன் பின்னர் நமது அடுத்த கட்டம் செவ்வாய் கிரகம்" என்று கூறினார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக