இலங்கையில் ஒரே நாளில் எகிறியது தங்கத்தின் விலை! நகைபிரியர்களுக்கு பேரதிர்ச்சி

Valluvan Media
0

 இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08) ஒரு பவுணுக்கு 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.




நேற்றைய தினம் 398,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை, இன்றைய உயர்வுடன் 4 இலட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலகச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்க விலை, இன்று ஒரே நாளில் 7,000 ரூபாயால் உயர்ந்துள்ளமை நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top