எரிபொருளுக்கு 100 ரூபாய் மானியம்! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 சந்தை விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின்" உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அந்த மானியத்தினால் அதிக பலன் பெறுபவர் யார் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்"சந்தை விலை ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்த பின்னர், டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் இந்த மானியத்தினால் அதிகம் பயனடைவது யார்? கிராமப்புறத்தில் உள்ள ஒருவர் 5 லீட்டர் டீசல் வாங்கினால், அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கிறது.

அதேவேளை, ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லீட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டால், அந்த நபருக்கு 10,000 ரூபாய் அரசாங்க மானியம் கிடைக்கிறது. எனவே, இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவு சேகரிப்பில் (Data Collection) அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்." என குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top