பிற்பகல் 1 மணிக்கு பிறகு வானிலையில் திடீர் மாற்றம்! வெளியான அவசர அறிவிப்பு

Valluvan Media
0

 வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 




ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிவக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை, இன்று நண்பகல் 12.13 மணியளவில் தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்கை, எஹெலியகொட, மஸ்கெலியா, சியம்பலாண்டுவ மற்றும் பொத்துவில ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top