Top News

எரிபொருள் QR முறை பதிவு சிக்கலுக்கு தீர்வு! உடனே பதிவு செய்யுங்கள்

 புதிய பதிவுகளுக்கான QR குறியீட்டைப் பெறுவதற்கான முறைமை சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நுழைய முடியாது  பலர் தொழிநுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




புதிய பதிவுகளுக்கான QR குறியீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு இன்று (15) நண்பகல் 12.00 மணியளவில் கிடைக்கும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த பின்னர் இந்த எரிபொருள் QR குறியீடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருளை எந்த பிரச்சினையும் இல்லாமல் பெற முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய (QR Code) குறியீடுகளை பதிவு செய்யும் நடைமுறை இன்று நண்பகல் ( 12) மணிக்குள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, (QR Code) முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் https://share.google/UVQADndNCRXt8x8Ew என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள்.

3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும்.

4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile Device) சேமித்துக்கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (Print) கைவசம் வைத்திருக்கலாம்.

முக்கிய குறிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது, இந்த QR குறியீட்டைக் காண்பித்து உங்கள் எரிபொருள் தேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Buses - 60L
Motorcycle - 5L
Van - 40L
Motor car - 15L
Motor Lorry - 200L
Land Vehicles - 25L
Three-wheelers - 15L
Special Purpose Vehicles - 40L
Quricycle - 5L: Ministry of Energy

Post a Comment

Previous Post Next Post