சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் இதுதான் தண்டனை : சற்றுமுன் நீதிமன்றம் அதிரடி!

Valluvan Media
0

 நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனையும் 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த நபருக்கு நீதவான் பாசன் அமரசேன இந்த தண்டனையை விதித்துள்ளார்.

வெல்லவத்தை பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து எரிபொருள் கேனில் பெறப்பட்டதாக வெல்லவத்தை பொலிஸார்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வெல்லவத்தை பொலிஸார், பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட குறித்த நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்படும் போது லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு கேன் பெட்ரோல் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top