அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை! நகை வாங்க சரியான நேரம்

Valluvan Media
0

 சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (20) சரிவு பதிவாகியுள்ளது.



 
அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்து வருவது இந்த விலை மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,656.19 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 72.66 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டொலர் தொடர்ந்து வலுவடைந்து வருவது, தங்கம் போன்ற முதலீடுகள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளமை விலை வீழ்ச்சிக்கான காரணமாக அமைந்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் உலகளாவிய பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன், நிச்சயமற்ற சூழலில் முதலீட்டாளர்கள் தங்களது சொத்துக்களை மீளமைப்பது விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top