விவசாயிகளுக்கு சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்

Valluvan Media
0

 மத்திய கிழக்கில் அமெரிக்கா - -ஈரான் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் சந்தையில் ஒரு தொன் துகள் யூரியாவின் விலை, 660 அமெரிக்க டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.



இது சராசரி விலையுடன் ஒப்பிடும்போது 89% மிகப்பெரிய உயர்வாகும். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உலக உர விலை இவ்வளவு அதிகமாக உயர்வது இதுவே முதல் முறையாகும்.

உலகின் எண்ணெய் மற்றும் உர விநியோகத்துக்கான முக்கிய கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானுடனான போர் அச்சுறுத்தல் காரணமாக தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து உலகுக்கான உர ஏற்றுமதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

கூடுதலாக, உலகின் மிகப்பெரிய உர ஏற்றுமதியாளரான சீனா, தனது உள்நாட்டு சந்தையைப் பாதுகாப்பதற்காக உர ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது. இது இந்த நெருக்கடியை நேரடியாக மேலும் பாதித்துள்ளது.

உலக உர விலைகளில் ஏற்படும் விரைவான உயர்வு, உலகளாவிய விவசாயம் மற்றும் உணவு உற்பத்திச் செலவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் எதிர்காலத்தில் பெரும் உணவுப் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முன்னதாக, 2022இ-ல் ரஷ்ய - -உக்ரைன் போர் வெடித்தபோது, ஒரு தொன் யூரியாவின் விலை 910 டொலராக உயர்ந்து, உலகளவில் ஒரு கடுமையான உணவு நெருக்கடியை உருவாக்கியது. தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடி விரைவாகத் தீர்க்கப்படாவிட்டால், 2022இ-ல் உலகம் சந்தித்த அதே பயங்கரமான உலகளாவிய உணவு நெருக்கடியை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top