செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட யாரும் அறியாத அதிசயம்! நாசாவின் பரபரப்பு தகவல்

Valluvan Media
0

 நாசாவின் 'பர்சீவரன்ஸ் ரோவர்' (Perseverance Rover), செவ்வாய் கிரகத்தின் ஜெஸீரோ பள்ளத்தில் (Jezero Crater) தரைக்கு அடியில் புதைந்துள்ள ஒரு பழங்கால நதி டெல்டாவின் எஞ்சிய பகுதிகளைக் கண்டறிந்துள்ளது.




தரையை ஊடுருவிச் செல்லும் ரேடார் (Ground-penetrating radar) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 115 அடி (35 மீட்டர்) ஆழத்தில் இந்த நிலப்பரப்பு அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 3.7 முதல் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான மிக முக்கியமான ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு ஆறு ஏரி அல்லது கடலுடன் கலக்கும் இடத்தில் உருவாகும் விசிறி வடிவ வண்டல் படிவுகளே 'டெல்டா' என அழைக்கப்படுகின்றன.

இந்த புதிய கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால வரலாற்றில் அங்கு நீர் நிறைந்த சூழல் இருந்ததையும், அது உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக இருந்திருக்கலாம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

பூமியைப் போலவே செவ்வாய் கிரகமும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலையில், அதன் ஆரம்பக்காலத்திலேயே அங்கு ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்ததை இந்த ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top