மரணத்தின் உச்சத்தை பார்த்து திரும்பிய உயிர்! இலங்கையில் சம்பவம்

Valluvan Media
0

நுவரெலியாவின் புகழ்பெற்ற World’s End பகுதியில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றது.




பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மலை விளிம்பில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென கால் தவறி சுமார் 50 அடிக்கு மேற்பட்ட ஆழமான பள்ளத்திற்குள் சரிந்து விழுந்தார்.

சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தகவல் வழங்கியதையடுத்து, இராணுவத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடும் பனிமூட்டம் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு மத்தியில் கயிறுகள் உதவியுடன் பல மணிநேரம் போராடி, மாணவியை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அவர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் நிலை தற்போது ஆபத்துக்கு அப்பாற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

World’s End போன்ற ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top