எரிபொருள் விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Valluvan Media
0

 இம்மாதம் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.




இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (28) ஏற்பாடு செய்துள்ள சிறப்புச்செய்தியாளர் சந்திப்பு  தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது  ஊடக சந்திப்பில் பங்கேற்ற  இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எதிர்காலத்தில் விலை திருத்தம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று தலைவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், எரிபொருள் கியு.ஆர் ஒதுக்கீட்டு புதுப்பிப்பு இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top