புதன்கிழமை விசேட விடுமுறை: தனியார் துறையினருக்கு அரசு விடுத்த முக்கிய கோரிக்கை

Valluvan Media
0

 அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமை விடுமுறை முறையை, தனியார் துறையினரும் தங்களது சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப பின்பற்றுமாறு தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.




இது தொடர்பாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ கருத்த வெளியிடுகையில்,

புதன்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு தனியார் துறையினரை அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. எனினும், அரச அலுவலகங்களின் வேலைத்திட்டத்துடன் ஒத்துப்போகக்கூடிய நிறுவனங்கள் இதனைப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பலவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குதாரர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதால், திடீரென விடுமுறையை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது.

இந்தத் தீர்மானமானது தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழில்துறைகளில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம் ஆகிய இரண்டையும் சமமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட வேண்டும் என செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, அரச அலுவலகங்களுக்கு இன்று (18) முதல் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவதாக கடந்த திங்கட்கிழமை (16) அறிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top