Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

பெரும் சோகத்தில் ஆழ்த்திய இளம் சட்டத்தரணியின் மரணம் இலங்கையை உலுக்கிய சோகம்

 மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகா அவர்களின் கணவரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார்.

பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக