ஈரானின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் மூன்றாம் உலக மகா யுத்தம் ஆரம்பமாகிறதா?

Valluvan Media
0

 ​மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான சுல்தான் இளவரசர் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) ஈரான் ஏவுகணைகளால் துளைத்தெடுத்துள்ளது.




அதிகாலை வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், வானத்தை கிழித்துக்கொண்டு வந்த ஈரானின்  ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்கள், அமெரிக்க ராணுவத்தின் இதயப்பகுதியைத் தாக்கியுள்ளன.

​நடந்தது என்ன? - அதிரவைக்கும் தகவல்கள்..
​ வீரர்கள் காயம் -  இந்தத் தாக்குதலில் 10 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​சிதைந்த போர் விமானங்கள் - அமெரிக்காவின் பெருமையான KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அதிநவீன E-3 Sentry AWACS விமானங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

​ பதிலடி - அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் 'ஆபரேஷன் எபிக் பியூரி'க்கு (Operation Epic Fury) பதிலடியாகவே இந்த "மின்னல் வேக" தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

​உலகமே உற்றுநோக்கும் அடுத்த கட்டம்! 
​பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். தற்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, தனது புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவை போர் முனைக்கு விரைந்து அனுப்பியுள்ளது.

​மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா? என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top